1. செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை : எங்கெங்கு தெரியுமா?

Daisy Rose Mary
Daisy Rose Mary
rain in chennai

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக , அடுத்த 48 (07.11.2020 மற்றும் 08.11.2020) மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 72 (09.11.2020) மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இடையப்பட்டி (மதுரை )7செ.மீ , காரியாபட்டி (விருதுநகர் ) 6 செ.மீ , விரகனுர் அணை (மதுரை ), மானாமதுரை (சிவகங்கை ), பேரையூர் (மதுரை ) தலா 5 செ.மீ , திருபுவனம் (சிவகங்கை ), தல்லாகுளம் (மதுரை ), பிளவக்கல் (விருதுநகர் ), காயல்பட்டினம் (தூத்துக்குடி), கூடலூர் (தேனி), திருச்செந்தூர் (தூத்துக்குடி ), சோழவந்தான் (மதுரை ) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க..

வேளாண் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!!

வெங்காய விலை எப்போது குறையும்? - வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு!!

ரூ.50,000 செலவழித்தும் ரூ.5000க்கும் கூட வழியில்லை! - ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!

English Summary: IMD chennai Issued very heavy rain alert for 5 districts in TamilNadu for next 2 days Published on: 07 November 2020, 02:20 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.