வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓய்வுகால வருமானத்தைப் பெற மிகச் சிறந்த 5 முதலீட்டு திட்டங்கள்.!
3 நாட்களுக்கு கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும்18ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை - பி.ஆர் பாண்டியன்!!
Share your comments