இந்தியாவில் கடன் செயலிகளால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், இது தொடர்பாகப் பலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டும், இதுகுறித்து புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் மத்திய நிதியமைச்சகம் சில நாட்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆன்லைன் கடன் செயலிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டு முதல் பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளது.
டிஜிட்டல் கடன் (Digital Loan)
டிஜிட்டல் கடன் சேவை நிறுவனங்கள் கடன் அளிக்கும் போதும், அக்கடனைத் திருப்பி வசூலிக்கும் போதும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கில் இருந்து தான் செய்யப்பட வேண்டும். கடன் இடைநிலை செயல்பாட்டில் LSP களுக்குச் (lending service provider) செலுத்தப்படும் எந்தவொரு கட்டணமும் நேரடியாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனத்தால் செலுத்தப்பட வேண்டும், கடன் வாங்கியவரால் அல்ல.
ரிசர்வ் வங்கி 2021 ஜனவரியில் டிஜிட்டல் கடன் தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும் விதிமுறைகளைப் பரிந்துரைப்பதற்கும் ஒரு பணிக்குழுவை அமைத்தது. நவம்பரில் இந்தச் சிறப்புக் குழு டிஜிட்டல் கடன் வழங்குபவர்களுக்குக் கடுமையான விதிமுறைகளை முன் வைத்தது. இப்பணிக்குழு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அமைக்கப்படும் நோடல் ஏஜென்சி மூலம் டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளைச் சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்துவது, டிஜிட்டல் கடன் எகோசிஸ்டம் அமைப்பில் பங்கேற்பாளர்களைச் சரிபார்க்க சுய-ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
3 பிரிவுகள் (3 Types)
ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கடன் வழங்குபவர்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. முதலாவதாக, ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் கடன் வழங்கும் வணிகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்.
இரண்டாவதாக, மற்ற சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை விதிகளின்படி கடன் வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் ஆனால் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படாத அமைப்புகள்.
மூன்றாவது தொகுப்பில் எந்தவொரு சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை விதிகளின் கீழ் வராத அமைப்புகள் மறைமுகமாகக் கடன் வழங்கும் நிறுவனங்கள். இந்தப் பிரிவு தான் தற்போது மக்களுக்கும் சரி, அரசுக்கும் சரி பெரும் பிரச்சனையாக உள்ளது.
மேலும் படிக்க
Share your comments