பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்த முக்கிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒமைக்ரான் தாக்கம் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
ஊரடங்கு (Curfew)
அதே சமயத்தில் நாட்டின் பொருளாதாரத்தை காக்க முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்று டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஒரே இரவில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் நாடு முழுவதும் ஒமைக்ரான் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில்பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கிவிட்டது. ஏற்கனவே 2 டோஸ் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட குடிமக்களுக்கு மூன்றாவது போஸ்டர் (Third Booster) செலுத்துவதன் மூலமாக ஒமைக்ரான் தாக்கத்திலிருந்து குடிமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முடியும். இந்த பூஸ்டர் டோஸ் குறித்து சில தகவல்களை பார்ப்போம்.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் நாட்பட்ட நோய்க்காக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 9 மாதங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்தலாம். எனவே இவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
முன்களப் பணியாளர்களுக்கு தற்போது பூஸ்டர் செலுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. முன்னதாக டெல்டா ரக வைரஸ் தாக்கியதை அடுத்து ஒரு வார காலத்துக்குள் பலர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது பூஸ்டர் டோஸ் துரிதமாக குடிமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் துவங்கி 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் 1.5 பில்லியன் தடுப்பு மருந்து இறக்குமதியாகி உள்ளது.
கடந்த ஆண்டு 24 மணிநேரத்தில் நான்காயிரம் பேர் மரணம் அடைந்த நிலையில் தற்போது தினசரி 146 பேர் மட்டுமே சராசரியாக மரணம் அடைகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பூஸ்டர் தடுப்பு மருந்து செலுத்திக்கொள்வது மட்டுமல்லாமல் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்தாலே ஒழிய இதற்கான முழு பலனை அடைய முடியாது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
எதுவும் செய்யாது ஒமைக்ரான்: பயம் வேண்டாம் என மருத்துவ நிபுணர் அறிவுரை!
வீடுகளுக்கே சென்று கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுக்கள்!
Share your comments