தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தங்களது சந்தாதாரர்களின் சொந்த விவரங்கள், தனிநபர் தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. சொந்த தகவல்களை தவறுதலாக பகிர்ந்துகொண்டால் உங்களின் பணம் காணாமல்போகும் அபாயம் இருப்பதாகவும் EPFO எச்சரித்துள்ளது.
இதுகுறித்த தகவலை EPFO தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்தாதாரர்களின் ஆதார் எண், UAN நம்பர், OTP, வங்கிக் கணக்கு எண் போன்ற சொந்த விவரங்களை EPFO எப்போதும் தொலைபேசி அழைப்பு மூலமாகவோ, சமூக வலைதளங்கள் வாயிலாகவோ கேட்பதில்லை” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில மோசடி கும்பல்கள் EPFO என்ற பெயரில் சந்தாதாரர்களின் சொந்த விவரங்களை கேட்டுப் பெற்றுக்கொண்டு அதன் மூலம் பணத்தைக் கொள்ளையடித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்காக அந்த மோசடி கும்பல்கள் நிறைய பணம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகின்றனர்.
இதேபோல, கொஞ்சம் பணம் டெபாசிட் செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனவும் போலியாக பேசி பணத்தைக் கொள்ளையடித்து வருகின்றனர். இதனால் ஏராளமான புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து, சந்தாதாரர்கள் யாரும் சொந்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என EPFO அறிவிறுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Share your comments