1. செய்திகள்

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு! மக்கள் மகிழ்ச்சி

T. Vigneshwaran
T. Vigneshwaran
Ration shops

தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

பண்டிகைக் காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரணப் பொருட்கள் என அனைத்தும் ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை முதலான பொருட்களை விநியோகம் செய்யும் போது கடைகளிலேயே பாதியை சிந்தி சிதறிவிடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, ரேஷன் கடைகள் உள்ளேயும், வெளியேவும் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்கிறது என்பதை ரேஷன் கடை ஊழியர்கள் முதலில் உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அரிசி, கோதுமை முதலான பொருட்களை விநியோகம் செய்யும் போது சிந்தாமல் சிதறாமல் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படி சிந்திய பொருட்களை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்குவதாகவும் குற்றசாட்டு எழுந்தது.தரையில் சிந்திய ரேஷன் கடை பொருட்களை ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகம் செய்யவில்லை என்பதனையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை! அதிரடி உத்தரவு

வெறும் ரூ.200 முதலீடு செய்து ரூ.28 லட்சம் பெற வாய்ப்பு! திட்டம் என்ன தெரியுமா?

English Summary: Important order for ration shops! People are happy Published on: 30 July 2022, 03:20 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub