வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு! (Rain Alert)
தமிழகத்தில் நிலவும் வானிலை காரணமாக, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை! (Heavy Rain Alert)
சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Fisherman Warning)
-
இன்று மற்றும் நாளை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க...
தென்னந்தோப்பில் மீன் குட்டை அமைப்பவர்களுக்கு ரூ.25000 வரை மானியம்!!
மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!
Share your comments