சர்க்கரை துறைக்கான, 5,538 கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்திற்கு, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு, ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின்படி கரும்பு விவசாயிகளின் உற்பத்தி ஆதரவு தொகை, இரு மடங்காக உயர்த்தப்பட்டு, 1 குவின்டாலுக்கு, 13.88 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தவிர, குறைந்தபட்ச ஏற்றுமதி திட்டத்தின் கீழ், ஆலைகள் ஏற்றுமதி செய்யும், 50 லட்சம் டன் சர்க்கரைக்கு, உள்நாட்டு சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை, அரசே ஏற்றுக் கொள்ளும். மேலும், நடப்பு செப்டம்பருடன் முடிந்த, 2017-18ம் சந்தை பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 3.20 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் சந்தை பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 3.50 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
Share your comments