உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை சர்வதேச அளவில் போட்டித்தன்மை மிக்கதாக மாற்றுவதற்கும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. உற்பத்தியை மையமாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை (Incentives) வழங்கப்படும். இத்திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியுள்ளது. இதற்காக 10 உற்பத்தித் துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்துறைகளில் ரூ.2 லட்சம் கோடி வரையில் ஊக்கத்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச நாடுகளிலிருந்து அதிக அளவிலான முதலீடுகளை (Investment) ஈர்க்க முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது
10 துறைகள்:
எலெக்ட்ரானிக் சாதனங்கள், மருந்து, எஃகு, தொலைத் தொடர்பு, ஜவுளி, உணவுப் பொருட்கள், சோலார் போட்டோவோல்டிக், செல் பேட்டரி ஆகிய துறைகள் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் (Autonomous India Project) கீழ் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும், அதற்கான கொள்கைகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உற்பத்தியை மேம்படுத்தி, ஏற்றுமதியை அதிகரித்தால் சர்வதேச அளவில் இந்தியாவின் உற்பத்தித் துறையை போட்டி மிக்கதாக உருவாக்க முடியும். முதலீடுகளும் அதிகமாகக் கிடைக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
Krishi jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments