விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது வழக்கம். ஆற்காடு அடுத்த கலவையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் 1976ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் (paddy bundles) விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். மேலும், கடந்த வாரம் முதல் தினசரி மூட்டைகள் அதிகரித்து கொண்டு வருகின்றன.
நேற்றைய விலை நிலவரம்
நெல் ரகம் 51, ஒரு மூட்டை 75 கிலோ குறைந்தபட்ச விலை ₹1,065-க்கும் அதிகபட்ச விலை ₹1,130, குண்டு, 75 கிலோ மூட்டை குறைந்தபட்ச விலை ₹1,040-க்கும், அதிகபட்ச விலை ₹1,110-க்கும், சோனா நெல் 75 கிலோ மூட்டை குறைந்தபட்ச விலை ₹1,245-க்கும், அதிகபட்ச விலை ₹1,310-க்கும், மீனம்பூர் 75 கிலோ மூட்டை குறைந்தபட்ச விலை ₹1,869-க்கும், அதிகபட்ச விலை ₹2,529-க்கும் விற்கப்பட்டது.
மேலும், நேற்று ஒரே நாளில் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 2,415 நெல் மூட்டைகள் வந்தன. விவசாயிகள் ஈரப்பதத்துடன் (Moisture) கொண்டு வரும் நெல்லை வெளியில் உள்ள களத்தில் உலர்த்தி கோணிப்பையில் மூட்டை பிடித்து, மறுநாள் விற்பனை செய்கின்றனர்.
கணினி எடை மேடை
விவசாயிகள் டிராக்டர்களிலும், மினி லாரி மற்றும் மாட்டு வண்டியில் கொண்டு வரும் நெல் மூட்டைகள் விவசாயிகள் எடை போடுவதற்கு என்று கணினி எடை மேடை (Computer weight machine) அமைக்கப்பட்டுள்ளது.
கலவையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் நேற்று ஒரே நாளில் 2415 மூட்டைகளாக அதிகரித்துள்ளது. விவசாயிகள் கொண்டு வந்த ஈரப்பதம் நிலங்களை களத்தில் காய வைப்பதற்காக திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் ரூ.10 ஆயிரமாக விரிவுபடுத்தப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் கே.பாண்டியராஜன்
வாழைத்தார் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி
Share your comments