மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஏப்ரல் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்ட் சங்க தலைவர் சென்னாரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிட்னஸ் சர்ட்டிபிகேட் (FC)
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். மத்திய அரசு உடனடியாக பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சாலையில் இயங்கும் சரக்கு வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்வதுடன் பிட்னஸ் சர்ட்டிபிகேட் (FC) பெறுகிறார்கள்.
என்ன நியாயம்? (What is justice?)
அப்படி பெற்றால் மட்டுமே சரக்கு வாகனங்கள் சாலையில் இயங்க முடியும். ஆர்.டி.ஓ. (RTO)சான்றிதழ் பெறாமல் இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால் 15 ஆண்டுகள் இயங்கிய வாகனங்களை இயக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவருவது என்ன நியாயம்?
சட்டம் அநியாயமானது (The law is unfair)
தற்போதைய சூழ்நிலையில் புதிய லாரிகள் வாங்குவது கஷ்டமாகும். ஆகவே இத்திட்டம் கைவிட வேண்டும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது விதிக்கப்படும் அபராதம் தற்போது, ரூ.500ல் இருந்து ரூ.20 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் அபராதம் வசூலிக்கும் உரிமையை மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு லாரிகளை நிறுத்தி அபராதம் வசூலிக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இச்சட்டம் மிகவும் அநியாயமானது என்பதால், அதை வாபஸ் பெறவேண்டும்.
இன்சூரன்ஸ் விவகாரம் (Insurance affair)
இதற்கு முன் நாட்டில் 4 இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருந்தது. தற்போது தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா (Insurance Regulatory Development Athourity Of India) என்ற இன்சூரன்ஸ் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து 25 தனியார் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவைகள் சொந்த பாதிப்பு மற்றும் மூன்றாவது நபர் இன்சூரன்ஸ் உள்ளது. இதில் சொந்த பாதிப்பு பிரிமியம் செலுத்தும் சலுகைகள் உள்ளது.
வேலைநிறுத்த எச்சரிக்கை (Strike warning)
ஆனால் 3-வது நபர் இன்சூரன்ஸ் செலுத்தும் விஷயத்தில் பாதிப்பு உள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு ரூ.1250ஆக இருந்த பிரிமியம் தொகை 2020-ம் ஆண்டில் ரூ.45 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
எங்களது இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறினால் வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க....
லாரி வாடகை 30% அதிகரிப்பு: காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்!!
TNAUவின் மாதாந்திர நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி- அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது!
கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?
Share your comments