தற்போது கொரோனா வைரஸின் (Corona Virus) இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து தடுப்பு மருந்துகள் (Vaccine) செலுத்தும் பணி கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தடுப்பு மருந்து செலுத்துதல்:
கடந்த 92 நாட்களில் இந்திய அரசு 12 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை குடிமக்களுக்கு செலுத்தி உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. உலகில் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு வேகமாக தடுப்பு மருந்துகளை குடிமக்களுக்கு செலுத்தவில்லை என்று பெருமிதமாக தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
இந்தியா முதலிடம்:
தடுப்பு மருந்துகளை வேகமாகச் செலுத்துவதில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது அமெரிக்கா (USA). 97 நாட்களில் அமெரிக்கா இந்த இலக்கை எட்டி உள்ள நிலையில், சீனா (China) 108 நாட்களில் இலக்கை எட்டி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. தடுப்பு மருந்துகள் பற்றாக்குறை ஒரு பக்கம் ஏற்பட்டபோதும் மறுபக்கம் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும் வேகம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதே வேகத்தில் சென்றால் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி!
கோடை வெயில் சுட்டெரிப்பதால், பனை நுங்கு விற்பனை அமோகம்!
Share your comments