இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில் 2.40 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் ஆகும்.பயணிகள் வருவாய் மற்றும் சரக்கு வருவாயும் கடந்த நிதியாண்டினை விட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் பொதுமக்கள் தங்களது பயணத்திற்கு பெரிதும் நம்பியிருப்பது இரயில்வே போக்குவரத்தை தான். இதனிடையே ரயில்வே துறையின் சார்பில் 2022-2023 நிதியாண்டில் இரயில்வே துறைக்கு கிடைத்த வருவாய் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக செலவிட்ட தொகை குறித்த தகவலை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 2.40 லட்சம் கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது அதன் முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகரிம் ஆகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ரூ.49,000 கோடி அதிக வருவாய் ஈட்டியுள்ளது. 2022-23-ஆம் நிதியாண்டில் சரக்கு வருவாய் 15 சதவீதம் அதிகரித்து, அதன் மூலம் ரூ. 1.62 லட்சம் கோடி கிடைத்துள்ளது. பயணிகள் வருவாயைப் பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவாக 61 சதவீதம் அதிகரித்து ரூ. 63,300 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ரயில்வேயால் ஓய்வூதியச் செலவினங்களை முழுமையாகச் சமாளிக்க முடிகிறது. வருவாய்களின் தன்மை மற்றும் இறுக்கமான செலவின மேலாண்மை ஆகியவை RE இலக்கிற்குள் 98.14% செயல்பாட்டு விகிதத்தை அடைய உதவியுள்ளன. அனைத்து வருவாய் செலவினங்களையும் பூர்த்தி செய்த பிறகு, ரயில்வே அதன் உள் வளங்களில் இருந்து மூலதன முதலீட்டிற்காக ரூ. 3200 கோடிகளை ஈட்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில் பயணிகள் மூலம் வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பயணிகளின் வருவாய் முந்தைய ஆண்டை விட 61% அதிகரித்து ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது. இந்த கணிசமான வளர்ச்சிக்கு ரயில் பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதாலும், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்ததாலும் சாத்தியமடைந்துள்ளது.
2022-23 நிதியாண்டில் மொத்த ரயில்வே செலவினங்கள் ரூ.2,37,375 கோடி. இது கடந்த நிதியாண்டில் (2021-2022)-ல் ரூ.2,06,391 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முதலீட்டைப் பொறுத்தவரை, நெட்வொர்க்கின் திறனை அதிகரிக்க ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 5243 கிமீ- தொலைவிற்கு புதிய வழித்தடங்கள் மற்றும் இரட்டிப்பு/மல்டி-டிராக்கிங் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6657 கோடி ரூபாய் முதலீட்டில் 6565 கிமீ பாதை மின்மயமாக்கப்பட்டது, இது நடப்பு நிதியாண்டில் 100% மின்மயமாக்கல் என்ற இலக்கை அடைய ரயில்வே திட்டமிட்டுள்ளது. "ராஷ்டிரிய ரயில் சன்ரக்சா கோஷின் கீழ் ரூ. 11,800 கோடி முதலீடு பல்வேறு பாதுகாப்புப் பணிகளுக்காக FY23 இல் செய்யப்பட்டுள்ளது. இதுத்தவிர ரயில்வே தடங்கள், பாலங்கள், கிரேடு பிரிப்பான்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக ரூ. 25,913 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
விவசாய பணிக்காக அதிகரித்த டீசலின் தேவை- பெட்ரோலின் நிலைமை இப்படியாயிடுச்சே..
Share your comments