இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை ஓரளவு தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றான முக கவசம் (Face Mask) அணியும் பழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
முகக் கவசம் (Face Mask)
'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற வலைதள ஆய்வு நிறுவனம் 364 மாவட்டங்களைச் சேர்ந்த, 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் சச்சின் தபாரியா கூறியதாவது: கொரோனா பரவலை தடுப்பதில் முக கவசமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓர் அறையில் முக கவசம் அணியாமல் இருவர் இருந்தால், 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவரிடம் இருந்து மற்றவருக்கு பரவி விடும் ஆபத்து உள்ளது.
அதேநேரத்தில் 'என்-95' முக கவசம் அணிந்திருந்தால் வைரஸ் பரவ 600 மணி நேரமாகும். நாங்கள் நடத்திய ஆய்வின் போது, வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதாக, 29 சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர். இது, செப்டம்பரில் 12 சதவீதமாக குறைந்து, நவம்பரில் 2 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
அலட்சியம் (Careless)
கொரோனா பாதிப்பு குறைந்ததால் மக்கள் முக கவசம் அணிவதை அலட்சியப்படுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸின் அடுத்த அத்தியாயமாக ஒமிக்ரான் (Omicron) பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க
Share your comments