திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆர்.வி.எஸ்., பத்மாவதி தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள், லட்சுமிபுரத்தில் வாழையில் (Banana) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் பண்ணைப்பள்ளி உருவாக்கம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் விளக்கினர். வேளாண் கல்லூரி மாணவர்களின் இந்த செயல் விளக்கப் பயிற்சி, அனைத்து விவசாயிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கலை அலுவலர் பாண்டியன், உதவி அலுவலர்கள் பாலமுருகன், விவேகானந்தன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மாணவிகள் சுபலட்சுமி மனிஷா, ஷாலினி, திவ்யா, சங்கரி பங்கேற்றனர்.
சிப்பி காளான் வளர்ப்பு:
பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் கவி அபிஷ்மா, வைதேகி, ஆர்த்தி, சுவாதி, தாரணி, வினிஷா, சிரியாராஜ் ஆகியோர் தோட்டக்கலை (Hirticulture) அனுபவம் குறித்த பயிற்சியை கிராம விவசாயிகளுக்கு அளித்தனர். இதில் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் சிப்பி காளான் வளர்ப்பு மற்றும் கூடுதல் வருவாய் (Extra Income) ஈட்டுவது குறித்து விளக்கினர். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு மாணவிகள் அளித்த இந்த பயிற்சியின் மூலம், இனி கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கத்தில் செயல்படுவார்கள்.
விழிப்புணர்வு:
வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவும், நோய்க்கட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் பல்வேறு பயிற்சிகளை (Training) செயல் விளக்கத்துடன் அளித்து வருகின்றனர். விவசாயிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பயிற்சி பெறுகின்றனர். நோய்க்கட்டுப்பாடு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கூடுதல் வருமானம் பெறும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். சரியான விழிப்புணர்வு (Awareness) தான் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும். அந்த வகையில் வேளாண் கல்லூரி மாணவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
உழவு மாடு பற்றாக்குறையால், தன் மகனை வைத்து உழவுப் பணியை மேற்கொண்ட ஏழை விவசாயி
60 வயதைக் கடந்த மண்பானை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!
Share your comments