இயற்கையின் பரிமாண செயல்பாட்டால் ஒவ்வொரு உயிரினங்களும் உருவாகியுள்ளன. மனிதர்களும் சரி, விலங்குகளும் சரி. இயற்கைக்கு முன்னாள் அனைவரும் ஒன்றுதான். எல்லா உயிரினங்களுக்கும் தங்களது வாழ்விடம் மிக முக்கியமானது. மனிதர்கள் தங்களது வாழ்விடத்தில் ஏதேனும் மாற்றம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதை காப்பாற்றிக்கொள்ள அதற்கான போராட்டதில் ஈடுபடுகின்றன. அதை போலவே விலங்குகளும் தங்கள் வாழ்விடத்தை தக்க வைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் போராடுகின்றன.
விலங்குகளையும், அதன் வாழ்விடத்தையும் அழித்து மனிதர்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றன. இதனால் விலங்குகள் உயிர்வாழ்வது கடினமாகிறது, மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து இனப்பெருக்கம் பாதிப்படைகிறது. இந்தியாவின் தேசிய விலங்கான புலி இந்த அபாயத்தில் மூழ்கி கொண்டிருக்கிறது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்த வருகிறது. புலிகளின் பாதுகாப்பை மேம்படுத்தி அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்வதேச புலிகள் தினம்
இது புலிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச புலிகள் தினம் என ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2010 இல் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் காட்டுப் புலிகளின் எண்ணிக்கை குறைந்து அவைகளின் ஆபத்தான நிலையை கருத்தில் கொண்டு நிறுவப்பட்டது. மேலும் அந்த மாநாட்டில் புலிகள் அதிகம் உள்ள நாடுகள் 2020 இல் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதாக கூறியிருந்தது.
தற்போது இந்தியாவில்
தற்போது இந்தியாவில் 2,965 புலிகள் உள்ளன. மேலும் அகில இந்திய புலி மதிப்பீட்டு அறிக்கை 2018, திங்கள் கிழமை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் வெளியிடபட்டுள்ளது. அதிக எணிக்கையில்
* மத்தியப் பிரதேசம் 526 1 வது இடத்திலும்
* கர்நாடகா 524 2 வது இடத்திலும்
* உத்தரகண்ட் 442 3 வது இடத்திலும் உள்ளது.
அழிவதற்கான காரணங்கள்
வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வர்த்தகம்:
பாரம்பரிய சீன மருந்துகளில் புலியின் தலைமுடி முதல் வால் வரை பயன்படுகின்றன. மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் இவைகளின் மதிப்பு மிக அதிகம்.
வாழ்விடம் இழப்பு:
விவசாயம், மர வியாபாரம், மனித வளர்ச்சி போன்ற காரணங்களால் காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. இதனால் 93% புலிகளின் வாழ்விடம் பாதிக்கப்பட்டு புலிகள் உயிர்வாழும் வாய்ப்புகள் குறைகிறது. மேலும் இவைகள் மனிதனுடன் தங்கள் வாழ்விடத்திற்காக போராடும் நிலை ஏற்படுகிறது.
காலநிலை மாற்றம்:
காலநிலை மாற்றத்தின் விளைவாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கம்பீரமான ராயல் வங்காள புலிகளின் கடைசி வாழ்விடங்களில் ஒன்றான சுந்தர்பான்அழிந்து வருகிறது.
இவ்வாறு பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நம் இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளை எதிர்காலத்தில் படங்களில் பார்க்கும் நிலைமை உருவாகாமல் தடுக்க மனிதனால் முடிந்த பாதுகாப்பையும், விழிப்புணர்வையும் மேற்கொள்ள வேண்டும்.
K.Sakthipriya
krishi Jagran
Share your comments