உலகமெங்கும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலையின் (Second Wave) தாக்கம் குறைந்து, மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் திடடத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.எம். கேர்ஸ்
கோவிட் பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பி.எம்.கேர்ஸ் (PM Cares) திட்டத்தில் உதவிபெற, இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கோவிட் தொற்றால், பெற்றோர் இருவரையும் அல்லது சட்டப்பூர்வ காப்பாளர்கள் அல்லது தத்தெடுத்த பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம் (ரூ.10 லட்சம்) அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பி.எம்.கேர்ஸ் நிதியை பயன்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மே 29ம் தேதி தொடங்கி வைத்தார்.
இத்திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முழுமையான அக்கறை அளிக்கவும், குழந்தைகள் நீண்ட காலம் பாதுகாப்பு பெறவும், உடல் நலத்தை காக்க மருத்துவக்காப்பீடு (Medical Insurance) வசதி பெறவும், கல்வி பெறவும் அவர்களது 23வது வயது வரை உதவுகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவிபெற https://pmcaresforchildren.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும் படிக்க
100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரமானது புவனேஷ்வர்!
எச்சரிக்கை: அக்டோபரில் உச்சம் அடைகிறது கொரோனா 3வது அலை
Share your comments