ரூபாய் நோட்டுகளில் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக ரபீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல்கலாம் படங்கள் இடம் பெற உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மகாத்மாவுக்கு மாற்று
நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றி வேறு சிலரின் படங்களை இடம்பெறச் செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சில ஊடகங்கள் ளில் செய்தி வெளியிட்டன.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரத்தில் ரூபாய் நோட்டுகளில் ரபீந்திரநாத் மற்றும் அப்துல் கலாம் படங்கள் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பரிசீலனை
முன்னதாக ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் உள்ளிட்ட பிற முக்கிய இந்தியர்களின் படங்களை சில மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்த நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் யோசித்து வருவதாக சில தகவல்கள் வெளியாயின.
மேலும் படிக்க...
Share your comments