ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவ்வப்போது அதாவது சில நேரங்களில் பல விதமானப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அரசு வழங்கிய ரேஷன் கார்டுகள் மூலம் தான் ஏழை எளிய மக்கள் பசியாற்றிக் கொள்கிறார்கள். ரேஷன் கார்டுகள் மூலம்தான் அரசு ஏழைக் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி உதவி செய்கிறது.
ஆனால் பல முறை பொறுப்பில் இருக்கும் ரேஷன் கடை பொறுப்பாளர்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கொடுக்க மறுக்கிறார்கள். ஒரு சில சமயங்களில் கொடுக்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான அளவையும் குறைத்து விடுகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ளும் நேரங்களில் பின் வருபவையை பின்பற்றுங்கள், இனி கவலைப்பட வேண்டாம்.
அந்த நேரங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்கள் புகார் அளிக்க சில எண்கள் உள்ளன. ரேஷன் கார்டு பிரச்சனைகள் பற்றி புகார் அளிக்க அரசாங்கம் அந்ததந்த மாநிலங்களுக்கு உரிய ஹெல்ப்லைன் எண்களை அளித்துள்ளது. இந்த ஹெல்ப்லைன் எண்கள் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும். மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு ரேஷன் கடைகளில் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில்கொண்டு தங்களது புகார்களை அளிக்க ஹெல்ப்லைன் எண்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.
இங்கே நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஹெல்ப்லைன் எண்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் நிலையில் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரை சேர்க்கவும் இந்த எண்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஒரு சில மாநிலங்களின் ஹெல்ப்லைன் எண்கள் இதோ பின்வருமாறு
தமிழ்நாடு 1800 425 5901
தெலுங்கானா 1800 4250 0333
புதுச்சேரி 1800 425 1082
கர்நாடகா 1800 425 9339
கேரளா 1800 425 1550
பஞ்சாப் 1800 3006 1313
ராஜஸ்தான் 1800 180 6127
சிக்கிம் 1800 345 3236
மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
உங்கள் மாநிலத்தின் ஏற்படும் ரேஷன் பிரச்சனைகள் குறித்து பகிர்ந்துக் கொள்ள கட்டணமில்லா எண் பற்றிய தகவல்களை தேசிய உணவு பாதுகாப்பு தளமான https://nfsa.gov.in/portal/State_UT_Toll_Free_AA -லிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். ரேஷன் கார்டுக்கு (Ration Card) விண்ணப்பித்த பிறகும், பலருக்கு பல மாதங்களாக வரை ரேஷன் கார்டு கிடைக்காமல் இருக்கிறது என்பதை நாம் பெரும்பாலும் பல இடங்களில் கண்டுள்ளோம். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் இந்த ஹெல்ப்லைன் எண்களில் இதைப் பற்றி எளிதாக புகார் செய்யலாம்.
மேலும் படிக்க:
ஜூலை 31க்குள் ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: அமல்படுத்த உத்தரவு..!
Share your comments