சேலம் மாவட்டத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சக்கட்ட பாதிப்பு (Peak vulnerability)
கடந்த இரண்டு வருடங்களாக நம்மைப் பெரும் அவதிக்கு ஆளாக்கி வரும் கொரோனா தொற்றுப் பரவலால், உச்சக்கட்ட பாதிப்பை சந்தித்து வருகிறோம்.
குறிப்பாக நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும், வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா முதல் அலையை விட 2ம் அலை மோசமான விளைவுகளை ஏற்படுத்திய நிலையில், அதன் வீரியம் குறைந்த வருவதாக நம்பப்படுகிறது.
3-ம் அலை குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அனைவருமே அச்சத்தில் உச்சத்தில் இருக்கிறோம்.
தடுப்பூசி உருவில் (In the form of a vaccine)
இந்தியாவில் கொரொனா 2 வது அலை வேகமாகப் பரவி வரும்நிலையில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இதனிடையே சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கூடும் கூட்டத்தால் கொரொனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் கொரொனா தடுப்பூசி போட்டால் மட்டும்தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
புதிய கெடுபிடி (The new nuisance)
சேலம் மாவட்ட நுகர்பொருள் வழங்கல் துறையின் இந்த உத்தரவு, பொதுமக்களின் தலையில் இடியாக விழுந்துள்ளது. இருப்பினும், இந்த மாவட்டத்தில் இந்த யுக்திக்கு நல்லப் பலன் கிடைக்கும் பட்சத்தில், அனைத்து மாவட்டங்களிலும், ரேஷன் பொருட்களை வாங்க வருவோர், கொரோனாத் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற நிலையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன்மூலம் இனிமேல் இவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்கள் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை
Share your comments