ஈஷாவில் (Isha) மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்தாண்டு விழாவில் நேரில் பங்கேற்க முடியும். மேலும், அவர்கள் கோவிட் பரிசோதனை (Covid test) செய்து அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி உள்ளோம்.
சமூக வலைத்தளங்கள்
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், சமூக இடைவெளியை (Social Distance) பின்பற்றுவதற்காகவும், பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த தியான அனுபவத்தை பெறுவதற்காகவும் நேரில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவரும் தொலைகாட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் விழாவில் இலவசமாக கலந்துகொள்ளலாம்.
தேதி : மார்ச் 8 முதல் 11 வரை
இடம்: ஆதியோகி, தியானலிங்கம் மூடல்
மஹாசிவராத்திரி விழாவையொட்டி, ஆதியோகி மற்றும் தியானலிங்கம் மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். ஆகவே, பொதுமக்கள் அந்த நாட்களில் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் மீண்டும் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நீலகிரியில் கருகிய தேயிலைச் செடிகள்! கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள்!
கோடையில் நாட்டுக்கோழிகளை பராமரிப்பதன் அவசியம்!
Share your comments