1. செய்திகள்

ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Helmet Mandatory

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகர், புறநகர், குன்னூர், தேவாலா, கூடலூர் என 5 பெரிய இடங்கள் உள்ளன. அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளில் கடந்த 2019-ஆம் ஆண்டு 42 இருசக்கர வாகன விபத்துகளும், 2020-ஆம் ஆண்டு 42 விபத்துகளும், 2021ஆம் ஆண்டு 26 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.

இதில் 2019ஆம் ஆண்டு 8 பேரும்,  2020-ஆம் ஆண்டு 5 பேரும், நடப்பாண்டில் 8 பேரும் இறந்துள்ளனர். மேலும் ஆண்டுக்கு 50, 49, 20 பேர் என கை, கால்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட விபத்துகளில் உயிரிழப்புக்கு காரணம் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் எப்போதும் ஹெல்மெட் அணியாமல் இருப்பது தான் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டஒழுங்கின்படி அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை அலட்சியம் காட்டி பயணம் செய்வதால் விபத்துகளில் உயிரிழப்புகளும், கை, கால் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. வாகன விபத்துகளில் இறப்புகள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டதால் மட்டுமே நிகழ்ந்துள்ளாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

எனவே இதை தவிர்க்கும் பொருட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் வருகிற ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் என்று  இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் சரியான முறையில் லாக் செய்து அணிய வேண்டும் . ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை காவல்துறை மற்றும் இதர அரசு ஊழியர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் இதுவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.

ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் பொதுமக்கள், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - ஷிப்ட் முறையில் நடத்துவது குறித்து அரசு பரிசீலனை!

இயந்திரம் மூலம் நெல் நடவு: கடனுதவியில் இயந்திரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஜூலை 20 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!!

English Summary: It is mandatory to wear a helmet from August 1st !! Published on: 14 July 2021, 10:55 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.