தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பல நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் பயனடைகிறது.
ரேஷன் கடை (Ration Shop)
மக்களின் சிரமத்தை போக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைக்கு வருபவர்களிடம் மளிகை பொருட்களை வாங்கும் படி கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
புகார் (Complaint)
தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளிலும் மளிகை பொருட்களை வாங்கச் சொல்லி ரேஷன் அட்டைதாரர்களை கட்டாயப்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் அளிப்பது தொடர்பான விவரங்களை அப்பகுதிகளில் உள்ள கடைகளில் விளம்பரம் செய்யும்படி மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
UPI இல் தவறாக பணம் அனுப்பினால் இனி கவலையே இல்லை: இதைச் செய்தால் போதும்!
Share your comments