கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. ஓணம் பம்பர் 2022 (BR-87) அல்லது திருவோணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ 25 கோடி அறிவிக்கப்பட்டது. 25 கோடி ரூபாய் முதல் ரூ 1,000 வரை என பலதரப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டன. முதல் பரிசான ரூ.25 கோடியை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வென்றார்.
இரண்டாவது பரிசான ரூ.5 கோடியை கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்தது. ஓணம் பம்பர் லாட்டரி முடிவு அறிவிக்கப்படதும் அனைவருக்கும் பரபரப்ப்பு ஏற்பட்டது. ஓணம் பம்பர் 2022 (BR-87) அல்லது திருவோணம் பம்பர் என்று பெயரிடப்பட்ட இந்த லாட்டரியின் குலுக்கலை நடத்திய கேரள மாநில லாட்டரி துறை முடிவுகளை அதிகரித்தது.
டி.வி.எம் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் மற்றும் கூலியான அனூப் என்பவர் 25 கோடி ரூபாய் வென்றுள்ளார். 32 வயதான அனூப், இந்த லாட்டரி டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் வாங்கியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி பகவதி ஏஜென்சி இந்த லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்துள்ளது.
டிஜி 270912 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட் இரண்டாம் பரிசான ரூ.5 கோடியை வென்றது. இந்த லாட்டரி சீட்டை கோட்டயத்தில் உள்ள மீனாட்சி லாட்டரி ஏஜென்சி விற்பனை செய்தது.
மேலும் படிக்க:
Share your comments