மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் ஒரு கோடியே 12 லட்சம் பேர் பயனடைவார்கள்.
ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், தற்போதுள்ள சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
சென்னை: TAMCO மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.20,000 லட்சம் கடன் உதவி
அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு, 3 மாத அரியர் தொகையுடன் வழங்கப்படும்.முன்னதாக, மார்ச் 2022ல், ஜனவரி மாதத்தை கணக்கிட்டு அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், கடந்த ஜூலை முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை 4 ஆயிரத்து 394 கோடியே 24 லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்பட வேண்டும். அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் 6 ஆயிரத்து 261 கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் தொகை செலுத்தப்பட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, ஆண்டுக்கு 12 ஆயிரத்து 852 கோடியே 56 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். ஏற்கெனவே, இந்தியாவில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், இந்த கூடுதல் செலவுகளை மத்திய அரசு ஏற்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
சென்னை: TAMCO மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.20,000 லட்சம் கடன் உதவி
Share your comments