ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் வரும் ஓணம் பண்டிகையை தொடர்ந்து அரசுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
போனஸ் (Bonus)
போனஸுக்கு தகுதியில்லாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தெரிவித்துள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகள் நீட்டிக்கப்படும்.சேவை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும்.
அனைத்து அரசுத் துறை ஊழியர்களும் ரூ.20,000 பண்டிகை முன்பணத்திற்கு தகுதியுடையவர்கள். அமைச்சரின் கூற்றுப்படி, பகுதி நேர மற்றும் தற்செயலான ஊழியர்களுக்கு ரூ.6,000 சம்பள முன்பணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இனி PF பயனர்கள் டிஜிலாக்கர் மூலம் இதை செய்யலாம்: EPFO அறிவிப்பு!
தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: போக்குவரத்து துறை சேவைக்கட்டணங்கள் 10 மடங்கு உயர்வு!
Share your comments