1. செய்திகள்

மதுரையில் வரப்போகிறது மல்லிகை பூ ஏற்றுமதி மையம்! மத்திய அரசு ஒப்புதல்!

KJ Staff
KJ Staff
Jasmine Export
Credit : Maalai Malar

மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க உள்ளதாக மத்திய அரசு தனக்கு கடிதம் அனுப்பிருப்பதாக மாணிக்க தாகூர் எம்.பி தெரிவித்தார். மதுரை மல்லிகையை (Madurai Jasmine) உலக அளவில் கொண்டு செல்வதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று மக்களவைவில் குரல் எழுப்பி இருந்தேன். அதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் அனுப்பிய கடிதம் தற்போது வந்திருக்கிறது.

மல்லிகை ஏற்றுமதி மையம்

திருப்பரங்குன்றம் திருமங்கலம் பகுதியில் (எக்ஸ்போர்ட் ஜாஸ்மின் ) மல்லிகை மலர் பொருட்கள் ஏற்றுமதி மையம் (Jasmine Flower Export Center) அமைப்பதற்கு மத்திய அரசு அதற்கான பணிகளை தொடங்க இருப்பதாகவும். மல்லிகை உற்பத்தியாகும் மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதாகவும் அதில் மதுரை மல்லிகையை மத்திய அரசு வெளி மார்க்கெட்டிலும் ஏற்றுமதி செய்வதற்காகவும் மத்திய அரசோடு சேர்ந்து மாநில அரசு திட்டம் வகுக்கும் என்பதையும் கடிதத்தில் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இதுபோன்ற நல்ல திட்டங்கள் தென் மாவட்டங்களுக்கு வருவதற்கு மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் மல்லிகை ஏற்றுமதி யைம் உருவாகுவதற்கு இரு அரசுகளும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று மாணிக்க தாகூர் எம்.பி கூறியுள்ளார்.

மல்லிகைப் பூக்களுக்காக தனியொரு ஏற்றுமதி மையம் அமைக்கவிருப்பது, மல்லிகை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

குப்பைகளை மறுசுழற்சி செய்து, இயற்கை உரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம்!

கரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி!

English Summary: Jasmine Flower Export Center coming up in Madurai! Federal Government Approval! Published on: 17 January 2021, 04:34 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.