1. செய்திகள்

நகைக் கடன் தள்ளுபடி,எவருக்கெல்லாம்? வெளியான முக்கிய தகவல்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Gold Loan Waiver In Tamil Nadu

திமுக தேர்தல் அறிக்கையில் தொலை நோக்கு திட்டங்களைப் போலவே கவர்ச்சிகர அம்சங்களும் இடம்பெற்றன. அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும் குறிப்பிட்ட சில திட்டங்களை மட்டுமே உடனடியாக நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

அவற்றில் முக்கியமானது கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி தான், கல்விக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஆகிய திட்டங்களை மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்தத் திட்டங்களை எல்லாம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணமாக இருந்தாலும் தற்போது நிதி நிலைமை அதற்கு சாதகமாக இல்லை. இதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இந்த திட்டங்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும் யாருக்கெல்லாம் கிடைக்காது அதற்கு விதிமுறைகள் எதுவும் உள்ளதா என்று விவாதங்கள் எழுந்த வந்த நிலையில் யார் யாருக்கு இந்த சலுகை கிடைக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகிவருகின்றன.

நகைக்கடன் தள்ளுபடியை பொறுத்தவரை 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி திட்டத்தில் பயன் கிடைக்கும். கடன் அடமானமாக வைக்கப்பட்ட நகை 5 பவுனுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருந்தாலும், 5 பவுனுக்கான கடன் தொகை மட்டுமே பெற்றிருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும்.

5 பவுனுக்கும் அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்க வேண்டாமா என்று அரசு பரிசீலனை செய்து வருகிறது. நகைக் கடன் பெற்றவரோ, அவரது ரத்த உறவுகளோ அரசுப் பணிகளில் இருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படாது.

அதேபோல் தள்ளுபடி என்பதை இலக்காக வைத்து முறைகேடாக யாரேனும் நகைக் கடன் பெற்றிருந்தாலும் அவர்களும் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் மற்றும் அவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும்.

மேலும் படிக்க:

விவசாய நகைக்கடனை முறையாக செலுத்தியவர்களா நீங்கள்! உங்களுக்கு 3% வட்டி மானியம் அறிவிப்பு! - NABARD

எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்

English Summary: Jewelry loan waiver, for whom? Important information released! Published on: 09 August 2021, 04:32 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.