1. செய்திகள்

ரூ.15000 சம்பளத்தில் 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு

T. Vigneshwaran
T. Vigneshwaran

108 Ambulance

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் பள்ளி வளாகத்தில், 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

ஓட்டுநருக்கான தகுதிகள் :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உயரம் 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்த தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு, அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்:

பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்.சி‌. விலங்கியல், தாவரவியல் பயோ வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாதம் ஊதியம் ரூ.15,435 (மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு.

இந்த தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மேலும் படிக்க:

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் சர்க்கரை நோய்

யூடியூப் மூலம் தொழில் தொடங்கிய புதுக்கோட்டை பெண்கள்

English Summary: Job opportunity in 108 Ambulance with salary Rs.15000

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.