இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் சுமார் 5,282 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 3162 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்தவர்கள் பலரும் புதிய வாய்ப்புகளைத் தேடி வரும் நிலையில் இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் காலியாக உள்ள 3162 கிராம அஞ்சல் ஊழியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்அனுபவம் உள்ளவர்கள் மற்றும் முன்அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் இந்த காலிபணியிணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
-
பணி : கிராமின் டக் சேவக் Gramin Dak Sevaks
-
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
-
10, பிளஸ் 2 மற்றும் மேல் படிப்புகளில் கணினி அறிவியலை (computer science)ஒரு பாடமாக படித்திருந்தால் கணினி சான்றிதழ் அவசியம் இல்லை.
-
வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
-
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 14,500 வழங்கப்படும்.
-
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி மற்றும் ஆண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் இலவசம்
தேர்வு முறை
தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியிடங்கள் நிறப்பப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இளைஞர்கள் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். முதலில் உங்களை அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு செயதிட வேண்டும். பின்னர் அதில் வழங்கப்படும் பதிவு எண் மூலம் ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
நேரடியாக உங்களை பதிவு செய்துக்கொள்ள இதனை கிளிக் செய்யுங்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Share your comments