1. செய்திகள்

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Ration shops

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணிடங்கள் தொடர்பாக, விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.

அதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https//www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதார ர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? என்பது போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJD8என்ற யூடியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்த தேவையான செலான்களை மேற்காண்ட இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே உரம்’ திட்டம் தொடங்கினார் பிரதமர்

English Summary: Jobs in Ration Shops - How to Apply? Published on: 18 October 2022, 06:17 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub