1. செய்திகள்

ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
June 23 Schools Opening - Education Announcement!

ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, மாணவர்கள் தற்போது கோடை விடுமுறையைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் ரங்கசாமியின் அறிவுரைப்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. மேலும் கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறை

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து கொரோனா பரவல் குறைந்ததால், மீண்டும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. நடப்பு ஆண்டு கட்டாயமாக அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தகவல்

இந்நிலையில் புதுவையில், காமராஜர் கல்வித்துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிட்டார். இந்த நாட்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:

பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு கடந்த 5ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் இன்று 31ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி 2022-23ம் கல்வியாண்டுக்கு புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் ஒன்று முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 23ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.

தேர்வு முடிவுகள்

மேலும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இருப்பினும் வகுப்பு தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஜூன் 23ம் தேதி

கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 23ம் தேதி பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

மக்களே ஜாக்கிரதை- கோடையில் இந்த பொருட்கள் ஆபத்து!

முந்திரி வடிவில் முட்டை-வியக்கவைக்கும் கோழி!

English Summary: June 23 Schools Opening - Education Announcement!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.