அரசு தொழிலாளர்கள் மாதம் ரூ.42 செலுத்தினால் போதும் 60 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் தோறும் ரூ.1000 கிடைக்கும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அனைத்து மத்திய அமைச்சர்களையும் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை கண்காணிக்க 76 அமைச்சர்களும் ஒரு மாதத்திற்குள் தமிழகம் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், அரசுதொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்த அவர் அதில், மாதத்திற்கு ரூ. 42 செலுத்தினால் 60 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் முதலில் பெண்களுக்கு மட்டும் இருந்தது. தற்போது ஆண்களுக்கான பொன் மகன் சேமிப்பு திட்டம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், E-shram என்னும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல திட்ட அட்டை வழங்குவது என 7 திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க:
Share your comments