ஹிந்து கடவுளான காளிதேவி சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டரை பெண் சினிமா இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர்,
இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
புதுவிதமாக யோசிக்கிறோம் என்ற பெயரில் சினிமாத்துறையில் உலாவரும் சில கத்துக்குட்டிகள் மிக மோசமான எண்ணங்களை மக்களிடம் புகுத்தத் துணிந்துவிட்டனர். இதன் விளைவுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காளி போஸ்டர்.
கடும் எதிர்ப்பு
செங்கடல், மாடத்தி' ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது 'காளி' என்ற ஆவணப் படம் ஒன்றின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார். இப்படத்தை இயக்கிய, காளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் லீனா மணிமேகலை. அதில் 'காளி' தோற்றத்தில் ஒரு பெண் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து, லீனா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
இது குறித்து லீனா மணி மேகலை கூறும்போது, “ஒரு மாலைப் பொழுது, கனடா நாட்டில் டோரோண்டோ நகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வருகிறார். அப்போது நடக்கும் சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தா “arrest leena manimekalai'' ஹேஷ்டேக் போடாம “love you leena manikemalai'' டேஷ்டேக் போடுவாங்க,” என தெரிவித்துள்ளார்.
பப்ளிசிட்டி பேராசை
பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கடவுள்களை ஏன் இப்படி சித்தரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வி. சமீபகாலமாக ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் விதமான இதுமாதிரியான கொடூர சிந்தினையுடன் படமெடுக்க சிலர் கிளம்பி வருகின்றனர். படைப்பு சுதந்திரம் அவசியமே ஆனால் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஒரு மதத்தை இழிவுப்படுத்துவது என்ன மாதிரியான சுதந்திரம் என்ற கேள்வி எழாமல் இல்லை.
மேலும் படிக்க...
மானியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments