திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. முதலாவதாக திருப்பூர் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளிக்கான உலக திறனாய்வு உடற்திறன் தெரிவுபோட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது.
பேட்டரி டெஸ்ட் திட்டம் (Battery Test Program)
நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ் , 6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். 6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர பேட்டரி டெஸ்ட் என்ற திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால் , அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும். மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும் என்றவர் , விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது , உடல்ரீதியாகம் மன ரீதியாகவும் சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறினார்.
மேலும் படிக்க
ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
Share your comments