1. செய்திகள்

தமிழக காய்கறிகளை திருப்பி அனுப்பும் கேரளா! - அதிக ரசாயன மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழக காய்கறிகளில் அதிகளவில் பூச்சிக்கொள்ளி போன்ற ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக கேரளா குற்றம்சாட்டியுள்ளது. மதுரை பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட காய்கறிகளை திருப்பி அனுப்பப்படுகின்றன.

காய்கறிகளை திருப்பி அனுப்பும் கேரளா

விவசாயிகள் அறுவடை நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதால் மருந்தின் தாக்கம் காய்கறிகளில் அப்படியே தங்கி விடுகிறது. 2019, 2020 ஆண்டுகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட தமிழக காய்கறி லாரிகள், இக்காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது மீண்டும் அந்த நிலை உருவாகியுள்ளது.

பூச்சிக்கொல்லியால் மகசூல் குறையும்

  • ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பது குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி கூறுகையில், தோட்டக்கலை பயிர்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மையானது காய்கறிகளில் 40 நாட்கள் வரை நீடிக்கிறது.

     

  • நமக்கும் கால்நடைகளுக்கும் இதனால் தீங்கு ஏற்படுகிறது. அதிக ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது தீமை விளைவிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

     

  • நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது. மேலும் மகரந்த சேர்க்கை நடைபெறுவதில் பாதிப்பு ஏற்பட்டு மகசூலும் குறைகிறது.

     

  • மொத்தத்தில் நிலத்தின் தரம் குறைந்து பயிர் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை

பூச்சிக்கொல்லிகளைத் தவிர்க்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும். விதை நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதையை பயன்படுத்தலாம். ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் சுழற்சி முறையில் மாற்றுபயிர் சாகுபடி செய்யலாம். வெவ்வேறு இனப் பயிர்களை வேலியோரமாக பயிர் செய்வதன் மூலமும் பூச்சிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம், என்றார்.

மேலும் படிக்க....

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22ஆம் ஆண்டு; மாணவர் சேர்க்கைக்கான பதிவு ஏப்ரல் 1 முதல் துவக்கம்!!

 

English Summary: Kerala to send back Tamil Nadu vegetables due to Complains of over use of chemicals Published on: 28 March 2021, 04:31 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.