காவேரிப்பட்டணம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. தங்கள் பகுதியில் உடனடியாக மருத்துவமுகாம் அமைத்து உறிய சிகச்சை அளிக்க கால்நடை வளர்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோமாரி நோய் தாக்குதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நாகரசம்பட்டி, செல்லம்பட்டி, கம்புகாலப்பட்டி, காட்டுக்கொல்லை, வால்பாறை, வீரமலை, மல்லிக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை கோமாரி நோயால் தாக்கிவருகின்றது. இது வரை 10க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் இறந்துள்ளன என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றன்ர்.
கால்நடை மருத்துவர்கள் இல்லாத அவலம்
கடந்த சில வாரங்களாகவே இப்பகுதியில் பல்வேறு கிராமங்களில் மாடுகளை கோமாரி நோய் தாக்கி வருவதாகவும். இதனால் மாடுகள் இறப்பதாகவும், நாகரசம்பட்டி கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் வேலம்பட்டி கால்நடை மருத்துவமனைனைக்கு கால்நடைகளை கொண்டுசென்று கிசிச்சை அளிக்கப்படுவதாகவும் கேஆர்பி அணை இடதுபுறக் கால்வாய் நீட்டிப்பு பயன்பெறுவோர் சங்கத் தலைவர் சிவகுரு கூறியுள்ளார்.
மருத்துவமுகாம் அமைக்க வேண்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பாதல் பசு மாடுகளுக்கான தடுப்பூசி போடமுடிவதில்லை எனவே, தனியார் கால்நடை மருத்துவர்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே அரசு கால்நடை மருத்துவர்கள் இப்பகுதியில் தனிக் கவனம் செலுத்தி நோய் தாக்கம் உள்ள பசுமாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் இலவச தடுப்பூசி போட முடியாது. தேர்தல் முடிந்த பின் தடுப்பூசி போடப்படும் என்று அரசு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் கால்நடை வளர்ப்பவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசும், தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க....
கோடை வெயிலில் கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு : வாழப்பாடி விவசாயிகள் தவிப்பு!!
பால், தோல், இறைச்சி என அனைத்திலும் லாபம் அள்ளித்தரும் எருமை மாடு வளர்ப்பு!
Share your comments