எங்கள் இதழின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியருமான திரு. எம். சி. டொமினிக், அவர்களுக்கு உயரிய விருதான சர்தார் வல்லபாய் பட்டேல், வழங்கப் பட்டுள்ளது. நேஷனல் க்ரிஷி ஜீவன் கவுரவ் புரஷ்கார் 2019, அவரின் வேளாண் பத்திரிகை துறையில் செய்து வரும் சேவையை பாராட்டி அவருக்கு விருது வழங்கப் பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காந்தி நகர், குஜராத் - ல் நடை பெற்ற வேளாண் பத்திரிகை துறை சார்த்தவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். எங்கள் இதழின் தலைமை ஆசிரியருக்கு, குஜராத் மாநில ஆளுநர் ஆச்சாரிய தேவார்ட் அவர்கள் "சர்தார் வல்லபாய் பட்டேல்" விருது வழங்கி கௌரவித்தார். உடன் எங்கள் கிருஷி ஜாக்ரன் இயக்குனர் திருமதி. ஷைனி டொமினிக் மற்றும் மேலாண்மை தலைவர் திரு. ஆர். கே. டியோடிய போன்றோர் உடன் இருந்தனர்.
கடந்த நான்கு வருடங்களாக தேசிய விவசாய பத்திரிகையாளர் அமைப்பு இந்த விழாவினை நடத்தி வருகிறது. இம்முறை தேசிய அளவில் 5 வேளாண் பத்திரிகை துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்கள்.
கிருஷி ஜாக்ரனின் வளர்ச்சிக்கு அவர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். கிருஷி ஜாக்ரன் என்னும் வேளாண் மாத இதழ் இந்தியா மொழிகள் 12 (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, அஸ்ஸாமி, ஓடியா, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி) பிரசுரம் ஆகிறது. 12 மில்லியன் மக்கள், 22 மாநிலங்கள், 9 போர்டல் என விரிந்துள்ளது. வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் படி கொள்கிறோம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments