குறுவை பருவ நெல் சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 1.62 இலட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம், குறுவை பருவ நெல் சாகுபடி தொடங்கும். இதற்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து, அதே மாதம் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
குறுவை நெல் சாகுபடி (Kuruvai Paddy Cultivation)
நடப்பாண்டில், அணையில் போதுமான நீர் இருந்தது. கர்நாடகாவில் பெய்த மழையால், அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. ஆகவே, மே 24 ஆம் தேதி, முன்கூட்டியே பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.
கடைமடை பகுதிகள் வரை நீர் சென்று சேர்வதற்காக, 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் வழித்தடங்கள் துார்வாரப்பட்டன. இதனால், சாகுபடி பரப்பு நான்கு இலட்சம் ஏக்கரைத் தாண்டும் என, வேளாண் துறையினர் கணக்கு போட்டுள்ளனர்.
இதுவரை 1.62 லட்சம் ஏக்கரில் மட்டுமே, சாகுபடி துவங்கியுள்ளது. இம்மாத இறுதி வரை நடவு மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு கால அவகாசம் உள்ளது. எனவே, அதற்குள் சாகுபடி இலக்கு பூர்த்தியாகும் என, வேளாண் துறையினர் நம்புகின்றனர்.
மேலும் படிக்க
கருஞ்சீரகத்தின் அளப்பரிய மருத்துவப் பயன்கள் இதோ!
தொடர் வருமானத்திற்கு கோவைக்காய் விவசாயத்தை உடனே தொடங்குங்கள்!
Share your comments