1. செய்திகள்

வெண்டைக்காய் விலை குறைவு! வேதனையில் ஆற்றில் கொட்டிய விவசாயிகள்!

KJ Staff
KJ Staff
Credit : Amazon

நாளுக்கு நாள், விவசாயிகளின் நிலை திண்டாட்டமாகத் தான் இருக்கிறது. மழையில்லை என்றால், விளைச்சல் குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது. நல்ல மழை பெய்து மகசூல் (Yield) அதிகரித்தால், சந்தையில் விலையின்றி நஷ்டம் ஏற்படுகிறது. இதே நிலை தான் தற்போது வெண்டைக்காய் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. வெண்டைக்காய் கிலோ 2 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வெண்டைக்காய்களை டிராக்டரில் கொண்டு சென்று ஆற்றில் (River) கொட்டிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விலை குறைந்தது:

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, பூதிப்புரம், அரைப்படிதேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் வெண்டை விவசாயம் செய்தனர். தற்போது மழைக்காலம் என்பதால் வெண்டைக்காய் அதிக விளைச்சல் (Yield) ஏற்பட்டது. ஆனால், கேரளாவில் தேவை குறைந்ததால் அதிகம் கொள்முதல் (Purchase) செய்யவில்லை. எனவே விவசாயிகள் வெண்டைக்காய்களை பறித்து தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு கொண்டு வந்தனர். அங்கு கிலோ 2 மற்றும் 3-க்கு மட்டுமே விலை போனது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மூட்டைகளிலேயே வெண்டைக்காய்களை தேக்கினர். அவை பழுத்து அழுகின.
இதனையடுத்து நேற்று முன்தினம் கமிஷன் கடைகளுக்கு கொண்டு வந்த வெண்டைக்காய்களை, விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒரு டிராக்டரில் எடுத்து வந்து முல்லைப்பெரியாற்றில் கொட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூலி கூட கிடைக்கவில்லை

விவசாயிகளின் இந்த செயல் பற்றி, தகவலறிந்த தோட்டக்கலைத்துறை (Department of Horticulture) அதிகாரிகள் நேற்று தேனி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது விவசாயிகள், ‘‘வியாபாரிகள் கிலோ ₹2க்கு மட்டுமே கேட்பதால் வெண்டைக்காய் பறித்த கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் ஆற்றுக்குள் கொட்டினோம்’’ என்றனர். இதுகுறித்த அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கொத்தமல்லிக்கு கட்டுபடியான விலையில்லை! அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்!

English Summary: Ladies Finger is cheaper! Farmers pouring into the river in pain! Published on: 19 November 2020, 09:36 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.