1. செய்திகள்

தாமதமாக வந்த ஆசிரியர்கள் - தடாலடியாகக் கட்டாய விடுப்பு கொடுத்த CEO!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Late Teachers - CEO Granted Compulsory Leave!

தாமதமாக வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை வழங்குவது வழக்கம். ஆனால் பள்ளிக்குத் தாமதமாக வந்த ஆசிரியர்களுக்குக் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பிவைத்தார் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி. இப்படியும் உத்தரவிட முடியும் என்பதே வியப்பாக உள்ளது.

மாணவர்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டிய ஆசிரியர்களே இங்கு தண்டனைக்கு ஆளாகியிருப்பது, வருத்தத்திற்குரியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பள்ளி விரைவில் நூற்றாண்டு விழா காண உள்ளது. அங்கு 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கட்டாய விடுப்பு

இந்தப் பள்ளிக்கு கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்கள் விபரங்களைக் கேட்டறிந்தார்.
அப்போது பள்ளிக்கூடத்திற்கு 16 ஆசிரியர்கள் தாமதமாக வந்தது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த கல்வி அதிகாரி தாமதமாக வந்த 16 ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்.

மேலும், இனிமேலும் தாமதமாக வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து வகுப்பறைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பூபதி ஆய்வு நடத்தி விட்டு பள்ளி மாணவர்களுக்கு கணித வகுப்பு நடத்தினார்.
மேலும் பள்ளி மாணவர்களின் சந்தேகங்களுக்கும், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உரிய விளக்கம் அளித்தார். அப்போது மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை என குற்றம்சாட்டினர்.

இதையடுத்து அனைத்து ஆசிரியர்களையும் வரவைழைத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி, அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை கூறி பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்துமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். இது, அரசு பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க...

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்- காற்றில் கரைந்த இந்திய இசைக்குயில்!

உடல் எடைக் கூடினால் சம்பளம் கட்!

English Summary: Late Teachers - CEO Granted Compulsory Leave! Published on: 07 February 2022, 10:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.