தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான முதல் கன மழை வரை பெய்யும் என அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அவ்வப்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால், தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தேவாலாவில் அதிகபட்சமாக 7 செ.மீ., வரையும், சின்னக்கல்லாறு என்ற இடத்தில் 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. வரும் 29 ஆம் தேதி வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதால், தெற்கு தீபகற்ப பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments