தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மிதமான முதல் கனமான மழை பெய்து வருகிறது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்ககடலின் தென்மேற்கு – மத்திய மேற்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது குமரி முதல் தெற்கு ஆந்திரா வரை உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிக அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுவை மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களான திருநெல்வேலி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை,சென்னை, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வடகிழக்கு பருவமழையின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. மின்துறை சார்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பருவமழையின் போது தமிழ்நாட்டிலுள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின்தடை புகார்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 24 மணி நேரமும் தடையின்றி தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. புகார்களின் மீதான நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும் என்றார். மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதளத்தை பார்க்கவும்.
மின்தடை புகார் எண் - 1912
மின்வாரிய தலைவர் புகார் மைய எண் - 044-28524422 / 044-28521109
வாட்ஸ்அப் எண் - 94458 50811
அமைச்சர் அலுவலகம் - 044-24959525
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments