தமிழகத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவும், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்பர் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
தமிழகத்தை பொறுத்த வரை கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முன்பை விட மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று காத்திருந்து தடுப்பூசிக்களை செலுத்திக் கொள்கின்றனர். இது போன்ற சூழலில் மீண்டும் தடுப்பூசி (Vaccine) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போடுவதில் சிக்கல் நிலவி வருகிறது. தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடுகள் உள்ளது.அந்த வகையில் தமிழகத்திலும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளது. தடுப்பூசிக்கான பற்றாக்குறை காரணமாக, சென்னை மற்றும் இன்னும் பல இடங்களில் சில தினங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு கடந்த 8ஆம் தேதி வரை 29,18,110 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,30,08,440 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிகளின் தேவையை பூர்த்தி செய்ய கடினமாக உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிக்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் போது ஜிஎஸ்டி போன்ற வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடிதம் வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துகளை இறக்குமதி செய்கையில், சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடக் கோரி நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க:
ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகரிப்பு- தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரம்.
Share your comments