உலகின் 13 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குறித்து அமெரிக்க தகவல் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோரை உலகின் 13 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குறித்து அமெரிக்க தகவல் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) முன்னிலை வகிக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த, 'மார்னிங் கன்சல்ட்' என்ற தகவல் ஆய்வு நிறுவனம், சர்வதேச தலைவர்கள் குறித்து கருத்துக் கணிப்பு நடத்துகிறது.
கருத்துக் கணிப்புஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 13 நாட்டு தலைவர்கள் குறித்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. சமீபத்தில் அந்த நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடிக்கு முதலிடம் (First Place For PM Modi)
பிரதமர் நரேந்திர மோடி 72 சதவீத ஆதரவு பெற்று மூன்றாவது ஆண்டாக முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார் 64 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார். இத்தாலி பிரதமர் மரியோ திராகி 57 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
கடைசி இடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் 41 சதவீத வாக்குகளுடன் பின்னுக்கு தள்ளப்பட்டனர். இந்த பட்டியலில் 26 சதவீத ஆதரவுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ள இந்தப் பாராட்டும், பெருமையும் நிச்சயம் அனைவரது உள்ளத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி முதலிடம் பிடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
பள்ளிக்கு 1 இலட்சம் நன்கொடை அளித்த பெண் வியாபாரி: பிரதமர் மோடி பாராட்டு!
இந்தியாவில் 1 லட்சத்திற்கும் கீழே குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!
Share your comments