ஓசூர் மாநகராட்சியில் ஓட்டுக்காக, அ.தி.மு.க., வேட்பாளர் மாட்டுச் சாணம் அள்ளினார். இதை அவரது கணவர், 'வீடியோ' எடுத்து பகிர்ந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 11வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் ரூபா என்பவர் போட்டியிடுகிறார். தன் வார்டிலுள்ள சதாசிவ நகர், இந்திரா நகர், தாயப்பா தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் நேற்று முன்தினம் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்களின் வீடுகள் முன் கட்டப்பட்டிருந்த மாடுகளின் சாணத்தை கூடையில் அள்ளினார்.
சாணம் அள்ளிய வேட்பாளர்
ரூபாவின் கணவர் நந்தகுமார், 10வது வார்டில், அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர். தற்போது மனைவி ரூபாவிற்கு, 11வது வார்டில், 'சீட்' வாங்கி கொடுத்துள்ளார். இந்த வார்டில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி கடுமையாக உள்ளது. இதனால், ஓட்டுக்காக மனைவியை நந்தகுமார் மாட்டுச் சாணம் அள்ள வைத்துள்ளார். இதை, அவர் வீடியோ எடுத்தும், பகிர்ந்து வருகிறார்.
உள்ளாட்சி தேர்தல் (Local Body Election)
வருகின்ற நகர உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களை கவர பல்வேறு புது யுக்திகளை கையாள வேட்பாளர்கள் தயங்கவில்லை. அதில் ஒன்று தான் இந்த சாணம் அள்ளிய வேட்பாளரின் ஓட்டு சேகரிப்பு.
வேட்பாளர்கள் எந்த விதத்தில் ஓட்டு சேகரித்தாலும், பொதுமக்களின் முடிவை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். யாருக்கு இந்த தேர்தல் சாதகமாக அமையும் என்பதை தற்போது கணிப்பது அசாத்தியமானது.
மேலும் படிக்க
வெகுவாக குறைகிறது கொரோனா: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்!
விபரீத விளையாட்டு: சேலையை எடுக்க மகனை 10வது மாடியில் இருந்து கீழே இறக்கிய பெண்!
Share your comments