கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னையில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவதுடன் பொதுமக்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சென்னையில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை அடங்கிய இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் தலைத் தூக்கி உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் கொலைகாரக்கொரோனா ஆட்டம் போடத் தொடங்கிவிட்டது. இதனால் மக்களிடையே அச்சமும் தீவிரவமாகப் பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பொதுஇடங்களில் மாஸ்க் கட்டாயம், தீவறினால் ரூ.500 அபராதம் எனக் கட்டுப்பாடுகளும் மறுபுறம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னை கிண்டி, ஐஐடி வளாகத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என மொத்தம் 55 பேருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நேற்று மேலும் ஐந்து பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
உயர் கல்வி நிறுவனமான ஐஐடியில் கொரோனாவுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவது, கொரோனா நான்காவது அலையின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், தலைநகர் சென்னையில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுவிடுமா என்ற அச்சம் பொதுமக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.
மேலும் படிக்க...
Share your comments