1. செய்திகள்

சிக்னல்ல பார்த்து போங்க, புது ரூல் இன்று முதல் அமல்

T. Vigneshwaran
T. Vigneshwaran
New Traffic Rules

சென்னையில் இன்று அமலுக்கு வரும் மோட்டார் வாகன விதிகளின்படி, சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இது, தமிழ்நாட்டில் வரும் 28-ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகிறது.அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமன்றி, அவர்களுடன் பயணிக்கும் நண்பர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடகை கார், ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அரசின் அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இதேபோல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்றால் அபராத தொகை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வாகன பந்தயத்தில் ஈடுபட்டால் 1,500 ரூபாய் முதல் வசூலிக்கப்பட்ட அபராத தொகை இனி 15,000 முதல் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன் செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்

புதிய போக்குவரத்து விதிகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், உடன் பயணிக்கும் நபர்கள் மீது வழக்கு (வாடகை கார், ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாது).ஆம்புலன்ஸ், தீயணைப்பு, அரசு அவசர வாகனங்களுக்கு வழி விடாவிட்டால் ரூ. 10,000 அபராதம்.

மேலும் படிக்க:

தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?

துளசி சாகுபடி செய்து லட்சங்களில் வருமானம் பெறலாம்

English Summary: Look at the signal, the new rule will be effective from today Published on: 26 October 2022, 06:59 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.