1. செய்திகள்

குறைந்தது எண்ணெய் விலை-இல்லத்தரசிகளுக்கு நிம்மதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Low oil prices - relief for housewives!

சமையல் எண்ணெய் விலையை பெரும்பாலான நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதனால் பொதுமக்களுக்கு மிகப் பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன் உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து குடும்பங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

சர்வதேச விலை நிலவரம்

இந்நிலையில், அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

ரூ.30 வரை

இதையடுத்து அதானி வில்மர், இமாமி, ஜெமினி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை குறைத்துள்ளன. இதன்படி சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு சுமார் 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு குறைவு?

உதாரணமாக, ஃபார்சூன் சன்பிளவர் ஆயில் விலை 210 ரூபாயில் இருந்து 199 ரூபாயாகவும், ஃபார்சூன் கடுகு எண்ணெய் விலை 210 ரூபாயில் இருந்து 190 ரூபாயாகவும், ஃபார்சூன் கடலெண்ணெய் விலை 220 ரூபாயில் இருந்து 210 ரூபாயாகவும், ஃபார்சூன் ரைஸ் பிரான் ஆயில் விலை 225 ரூபாயில் இருந்து 210 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

விரைவில் அமல்

இம்மாத இறுதிக்குள் அனைவருக்கும் விலை குறைப்பு பலன்கள் கிடைக்கும் என அதானி வில்மர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல இமாமி, ஜெமினி ஆகிய நிறுவனங்களும் சமையல் எண்ணெய் விலையை குறைத்துள்ளன.
அதிரடியாக விலை குறைந்திருப்பதால், இல்லத்தரசிகளுக்கு நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

லெகின்ஸை விரும்பும் இளம்பெண்கள் - பதறவைக்கும் பக்கவிளைவுகள்!!

English Summary: Low oil prices - relief for housewives! Published on: 17 July 2022, 07:36 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.