வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிதமான முதல் கன மழை
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்தியக் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாகவும், ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோரப்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாவும் அடுத்த 48 மணி தேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்
கிருஷ்ணகிரி,தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)
போளூர் (திருவண்ணாமலை) 12, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 11, மாரண்டஹள்ளி (தர்மபுரி ) 7, ஓசூர் (கிருஷ்ணகிரி ), உதகமண்டலம் தலா 6, மணிமுத்தாறு (திருநெல்வேலி ), வைகை அணை (தேனி), குந்தா பாலம் (நீலகிரி ) தலா 5 மழை பதிவாகியுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 12ம் தேதி வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கை
-
அக்டோபர்10 முதல் அக்டோபர் 12 வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
அக்டோபர்09 முதல் அக்டோபர் 13 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
-
அக்டோபர் 11,12 வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் படிக்க..
விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!
காற்று மாசுபாட்டை தடுக்க டிராக்டர்களுக்கும் நெறிமுறைகள் வகுப்பு!
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திறங்கிய 45000டன் யூரியா உரம்! விரைவில் விநியோகம் தொடக்கம்!
Share your comments